Wednesday, May 11, 2016

Mercury Transit photo Album - Tambaram Astronomy Club


புதன் கோள் சூரிய விட்டம் கடப்பு - பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்
தாம்பரம் வானவியல் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட புதன்கோள் சூரிய விட்டம் கடக்கும் நிகழ்ச்சியை 9.5.2016 திங்கள் அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொலைநோக்கி மற்றும் பாதுகாப்பு கண்ணாடி அணிந்து கண்டு ரசித்தனர்
மாலை 4:42 மணி அளவில் புதன் கோள் சூரிய விட்டத்தில் நுழைந்தது. சிறுபுள்ளி போல் காட்சியளித்தது.  இடையில் சிலநிமிடங்கள் மேகம் மறைத்தாலும் மாலை 5:45 மணி வரை தெளிவாக தெரிந்தது பின்னர் சூரிய அஸ்தமனம் தருவாயில் அடிவானில் கருமேகம் சூழ்ந்து வானம் தெளிவற்று இருந்தது

Tambaram Astronomy club
Chennai, India
http://www.prohithar.com/tac/
https://directory.iau.org/directory/456

Wednesday, May 4, 2016

Mercury Transit 9th May 2016


சூரியன், புதன், பூமி நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வே புதன் கிரகம் சூரிய விட்டம் கடக்கும் நிகழ்வாகும். சென்னையில் மாலை 4:42 மணிக்கு துவங்கி சூரியன் மறைவு (சுமார் மாலை 6:15) வரை தெரியும்

திங்கள்கிழமை 9.5.2016 அன்று இந்த நிகழ்வை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்புடன் காணும் வகையில் தாம்பரம் வானியல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது

மீண்டும் இது போன்ற புதன் சூரிய விட்டம் கடவு 11.11.2019ல் நிகழ்ந்தாலும் சென்னையில் தெரியாது. சுமார் 16 வருடங்கள் கழித்து 13.11.2032ல் தான் சென்னையில் காண முடியும்

மேலும் சுமார் 1 மணி நேரம் மட்டுமே புதன் கிரக கடவு நன்கு தெரியும் என்பதால் குறைந்த நேரத்தில் அதிகம் பேர்(சுமார் 500 பேர்) பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்

இந்த அறிய பணியில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளலாம், இதற்காக தொலைநோக்கிகள், சூரிய கண்ணாடிகள் , பைனாகுலர்கள் தேவைப்படுகிறது.

வேண்டுகோள்: வருகை தருபவர்கள் தவறாமல் தலைக்கு தொப்பி மற்றும் குடிநீர் கொண்டு வரவும்.

நிகழ்வு இடம் தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மி தூரம் உள்ளது
மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையில் கோன்கிருஷ்ணா மண்டபம் ஒட்டிய தெருவில் வரவேண்டும் (லையன்ஸ் இந்தியா ஓட்டல் பின்புறம்)

வரைபடம் கீழே இணைப்பில் உள்ளது

http://prohithar.com/mercury/Chennai_tambaram_astronomy_club_location.jpg

Tambaram Astronomy Club
Balu Saravana Sarma
9840369677