Friday, March 27, 2015

முழு சந்திர கிரகணம் 4.4.2015

Duration of Lunar Eclipse - Chennai - Tambaram Astronomy Club
தாம்பரம் வானவியல் கழகம் Tambaram Astronomy Club
முழு சந்திர கிரகணம் 4.4.2015 சனிக்கிழமை (தமிழகத்தில் தெரியும்)
Chennai - Tambaram Astronomy Club - Total Lunar Eclipse 4 April 2015




 சூரியன் - பூமி - நிலவு ஆகிய மூன்றும் முழுநிலவு அன்று மிகச்சரியாக நேர்கோட்டில் வரும் பொழுது சந்திர கிரகணம் நிகழும்.

கிரகண துவக்கம்: பகல் 2:31, உச்சம்: மாலை 5:32, முடிவு: இரவு 8:30 4.4.2015 

சனியன்று அன்று பகலில் இந்திய நேரப்படி பகல் 2:31 மணிக்கு புறநிழல்(Penumbral) கிரகணம் துவங்கி, பகல் 3:44 மணி அளவில் நிஜநிழல்(Umbral) கிரகணமாக பிரவேஸிக்கிறது, நிலவு முற்றிலும் மறையும் கிரகண உச்சம் மாலை 5:32 மணிக்கு நிகழும்.

 தமிழகத்தை பொருத்தமட்டில் சூரியன் மேற்கில் மறையும் அதே நேரத்தில் சந்திரன் கிழக்கில் மாலை 6:19க்கு உதயமாகும். முழுசந்திர கிரகணம் விடுதலையாகும் நேரத்தில் தெரியும். சூரிய மறைவுக்கு பின்னர் சுமார் 55 நிமிடங்கள் மட்டுமே அதாகில் மாலை 7:15 வரை மட்டுமே நிஜ நிழல் கிரகணம் தெரியும், பின்னர் புறநிழல் (Penumbral) கிரகணம் இரவு 8:30 வரை தெரியும் (சுமார் 2 மணி 11 நிமிடங்கள்).

இதை வெறும் கண்களால் கிழக்கு திசையில் காணலாம். கிரகண பரிமாணம் 1.006.

 கிரகண நேரத்தில் பொதுமக்கள் தொலைநோக்கியில் நிலவைக்காண தா.வா. கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

பாலு சரவண சர்மா 98403 69677
http://www.prohithar.com/tac/index.php

No comments:

Post a Comment