Monday, March 30, 2015

Total Lunar Eclipse - Skywatch - 4.4.2015 - Chennai - Tambaram Astronomy Club

முழு சந்திரகிரகணம் காணுதல்
தாம்பரம் வானவியல் கழகம்
Total Lunar Eclipse  - Skywatch - 4.4.2015 - Chennai - Tambaram Astronomy Club

4.4.2015 சனிக்கிழமை அன்று "கிரகணம் காணுதல்" நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரம் மாலை 6 - 8
இடம்: 9, 4வது தெரு கல்யாண நகர், தாம்பரம், சென்னை 45
முடிச்சூர் சாலை, கோன்கிருஷ்ணா திருமண மண்டபம் அருகில்
லையன்ஸ் இந்தியா ஹோட்டல் பின்புறம்
தொடர்பு: பாலு சரவண சர்மா - 9840369677
http://www.prohithar.com/tac/

Friday, March 27, 2015

முழு சந்திர கிரகணம் 4.4.2015

Duration of Lunar Eclipse - Chennai - Tambaram Astronomy Club
தாம்பரம் வானவியல் கழகம் Tambaram Astronomy Club
முழு சந்திர கிரகணம் 4.4.2015 சனிக்கிழமை (தமிழகத்தில் தெரியும்)
Chennai - Tambaram Astronomy Club - Total Lunar Eclipse 4 April 2015




 சூரியன் - பூமி - நிலவு ஆகிய மூன்றும் முழுநிலவு அன்று மிகச்சரியாக நேர்கோட்டில் வரும் பொழுது சந்திர கிரகணம் நிகழும்.

கிரகண துவக்கம்: பகல் 2:31, உச்சம்: மாலை 5:32, முடிவு: இரவு 8:30 4.4.2015 

சனியன்று அன்று பகலில் இந்திய நேரப்படி பகல் 2:31 மணிக்கு புறநிழல்(Penumbral) கிரகணம் துவங்கி, பகல் 3:44 மணி அளவில் நிஜநிழல்(Umbral) கிரகணமாக பிரவேஸிக்கிறது, நிலவு முற்றிலும் மறையும் கிரகண உச்சம் மாலை 5:32 மணிக்கு நிகழும்.

 தமிழகத்தை பொருத்தமட்டில் சூரியன் மேற்கில் மறையும் அதே நேரத்தில் சந்திரன் கிழக்கில் மாலை 6:19க்கு உதயமாகும். முழுசந்திர கிரகணம் விடுதலையாகும் நேரத்தில் தெரியும். சூரிய மறைவுக்கு பின்னர் சுமார் 55 நிமிடங்கள் மட்டுமே அதாகில் மாலை 7:15 வரை மட்டுமே நிஜ நிழல் கிரகணம் தெரியும், பின்னர் புறநிழல் (Penumbral) கிரகணம் இரவு 8:30 வரை தெரியும் (சுமார் 2 மணி 11 நிமிடங்கள்).

இதை வெறும் கண்களால் கிழக்கு திசையில் காணலாம். கிரகண பரிமாணம் 1.006.

 கிரகண நேரத்தில் பொதுமக்கள் தொலைநோக்கியில் நிலவைக்காண தா.வா. கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

பாலு சரவண சர்மா 98403 69677
http://www.prohithar.com/tac/index.php

Sunday, February 8, 2015

வியாழன் கோளை கண்டு ரசித்த மாணவர்கள்

Jupiter opposition 2015 - Tambaram Astronomy Club
சூரியனுக்கு எதிர்நிலையில் இருக்கும் வியாழன் கோள் பிரகாசமாக முழுவிட்டத்துடனும், அதன் நிலவுகளுடனும் அழகாக  தோன்றும் வானியல் நிகழ்வை தொலைநோக்கி மூலமாக மாணவர்கள் காணும் வகையில் தாம்பரம் வானியல் கழகம் சார்பாக 2015 பிப்ரவரி 6ம் தேதி முதல் ஒருவாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவில் மாணவர்கள் தொலைநோக்கிமூலம் காணும் காட்சி இணைக்கப்பட்டுள்ளது
அதிக தரமான படம்:
மீண்டும் 8, மார்ச் 2016 செவ்வாய் அன்று மாலை 4:16 மணி அளவில் சூரியன்-பூமி-குரு கிரகம் நேர்கோட்டில் வரும் அன்று மாலை சூரிய அஸ்தமனம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரை வானில் குரு கிரகத்தினை முழுவிட்டத்துடன் கண்டு ரசிக்கலாம்
(Jupiter at opposition Tue, 08 Mar 2016 at 16:16 IST)

Tambaram Astronomy Club

Balu Saravana Sarma

http://www.prohithar.com/tac/index.php